அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி செயலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் இரண்டாம் கட்ட விற்பனைக்காக, விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன.
BMW வாகனங்கள் - 2
போர்ட் எவரெஸ்ட் ஜீப் - 2
ஹூண்டாய் டெரகன் ஜீப் - 1
லேண்ட் ரோவர் ஜீப் - 2
மிட்சுபிஷி மொன்டெரோ - 1
நிசான் பெற்றோல் வகை வண்டிகள் - 3
நிசான் கார்கள் - 2
போர்ஷே கெய்ன் கார் - 1
சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் - 5
லேண்ட் குரூசர் சஹரா ரக ஜீப் - 1
வீ8 ஜீப் - 6
மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் - 1
ஆகியன இதில் அடங்கும். இது தொடர்பான விலை மனு விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 14 ஆம் திகதி வரை, இலக்கம் 93 ,ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள சலுசல நிறுவன வளாகத்தில் இந்த வாகனங்களை பரீட்சிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.