இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கடல் அட்டைகள் மீட்பு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சோதனை நடவடிக்கை
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜோதி நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். அதில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் மூட்டைகளில் கடல் அட்டைகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் இருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடா்பாக தெரசாபுரத்தை 38 வயதான ஒருவரையும் கயத்தாறையை சோ்ந்த 47 வயதான ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.