கடல் மண் கடத்திய சந்தேக நபரை வளைத்து பிடித்த பொலிஸார்!
கடல் மண் கடத்திய சந்தேக நபர் ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை பகுதியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை சோதனை இட்ட பொழுது அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வீரவாணி பகுதியில் குறித்த டிப்பர் வாகனம் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அனுமதி பத்திரம் இன்றி கடல் மண் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது. இதன்போது புத்தூர் கலைமதி பகுதி சேர்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பெற்றப்பட்ட டிப்பர் வாகனம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.