சந்தனம் குங்குமம் வைப்பதனால் இப்படி ஒரு அறிவியல் மாற்றம் உண்டா!
மங்களத்தின் அடையாளமாக இருக்கும் இந்த குங்குமம், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வைத்துக் கொள்வது உண்டு.
கோவிலுக்கு போனதும் குங்குமம், விபூதி பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. சிலர் அப்பொழுது மட்டுமே இவற்றை நெற்றியில் இட்டுக் கொள்வார்கள்.
பெண்கள் தினமும் இரு புருவ மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டியது அவசியமாகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் மட்டுமல்லாமல் நெற்றியின் வகிட்டிலும் வைத்துக் கொள்வது முறையாகும்.
எத் திசையில் நின்று வைக்க வேண்டும்
பெண்கள் இருபுருவ மத்தியிலும் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொள்ளும் பொழுது கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டுமாம்.
ஏனையவர் வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்
பாடசாலை செல்லும், வேலைக்கு செல்லும் பெண் குழந்தைகள் இருபுருவ மத்தியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு செல்வதால் மனோ தைரியம் அதிகரிக்கும்.
எதையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி அவர்களுக்கு கிடைப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது.
மகத்துவமான பலன்கள்
இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை அகற்றி வரக்கூடிய தீய சக்திகளில் இருந்து எதிர்த்து போராடக்கூடிய சக்தியையும் அளிக்கும்.
அதே போல ஆண்கள் இரு புருவ மத்தியில் சந்தனம் இட்டுக் கொள்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
தூய சந்தனம் இரு புருவங்கள் இணையும் இடத்தில் வைத்துக் கொள்ளும் பொழுது மூளையுடைய நரம்புகள் தூண்டப்படுகிறது.
ஞாபகங்களை பதிவு செய்யும் சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து உடலை உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ஆண்கள் வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்
பல ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை உஷ்ணம் தான். உடல் உஷ்ணம் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்படுகின்றான்.
இவர்கள் தினமும் நெற்றியில் சந்தனத்தை குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.
ஆன்மீக சிந்தனையுடனும் இதை அணிந்து கொள்வதால் பல அற்புதமான மாற்றங்கள் நிகழும்.
ஆண் பெண்
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நெற்றியில் குங்குமத்துடன், சந்தனத்தையும் வைத்துக் கொள்ளலாம். சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதால் மனம் ஒருமைபடுகிறது.
இரு புருவங்களுக்கு இடையில் சுண்டு விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து வைப்பதால் மனம் சாந்தப்படும்.
இந்த நிலையில் தியானம் செய்ய ஆரம்பித்தால் எதையும் சிந்திக்காமல் மன ஒருமைபாட்டுடன் தியானம் செய்ய முடியும்.
அந்த அளவிற்கு அற்புத சக்தி வாய்ந்த இந்த இடத்தில் குங்குமம் அல்லது சந்தனம் இட்டுக் கொள்வதால் பல நன்மைகள் நடக்கிறது.
சிந்தனை நரம்புகள் உடைய முடிச்சு இந்த இடத்தில் தான் இருக்கும்.தலைவலி, தலைபாரம் தீர்ந்து மன உளைச்சல் நீங்கும்.
புது தெளிவு, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். நரம்பு மண்டலம் குளிர்ச்சியுறும். ஹிப்னாடிசம் எனப்படும் சக்தியை முறியடிக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு என்று கூறப்படுகிறது.