போராட்டத்தால் முடங்கிய பாடசாலைகள்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!
நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று புதன்கிழமை (26) ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஏமாற்றத்துடன் செல்லும் மாணவர்கள்
இதன் காரணமாக அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (26) முற்பகல் 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.