காதலன் மற்றும் நண்பர்களால் பாடசாலை மாணவி நேர்ந்த கொடூரம்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பில் பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் 08 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் ஹங்வெல்ல - ஜல்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட 8 பேரையும் மணிநேரம் 48 தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஹோமாகம பதில் நீதவான் பிரியங்கா மத்தும பட்டபெந்திகே உத்தரவிட்டுள்ளார்.
கைதான 8 பேரில் பாடசாலை மாணவியின் காதலன் என்று கூறிக்கொள்ளும் இளைஞனும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிளிக்குமாறு ஹங்வெல்ல பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணால மற்றும் ஜல்தர பிரதேசங்களை சேர்ந்த குழுவொன்றே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த 21ஆம் திகதி பதிவாகியுள்ளது.