வுவனியாவில் சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் மாயம்
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதுடைய தி.லதுர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நேற்று மதியம் 02.30 மணியளவில் தாயிடம் இருந்து சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதற்காக பணம் பெற்று சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு வந்து சேரவில்லை.
இதன் காரணமாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கமான 0768644938, 0772432175 ஆகியவற்றுக்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.