தாத்தாவின் இரும்பு பட்டறையில் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் ; ஸ்தலத்தியே பிரிந்த உயிர்
இரும்பு வெட்டும் கருவி மூலம் பி.வி.சி குழாயை வெட்டும்போது பிளேடு உடைந்து மார்பில் மோதியதில் பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் கட்டான பகுதியைச் சேர்ந்த மாணவராவார்.
மாணவனின் தாத்தா இரும்பு வெட்டும் கருவியை பயன்படுத்தி தொழிலை செய்து வருகிறார், மாணவர் தனது தாத்தா இல்லாத நேரத்தில் இரும்பு வெட்டும் கருவியை பயன்படுத்தி பிவிசி பைப்பை வெட்டிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரும்பு வெட்டும் கருவியின் பிளேட்டின் ஒரு பகுதி உடைந்து மாணவனின் மார்புப் பகுதியில் ஊடுருவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடலைப் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.