தமிழர் பகுதியில் பாடசாலை மாணவனின் உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
கணவனை பிரிந்த இளம்பெண் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி செய்த தகாத செயல் ; உடனிருந்த இளைஞனுக்கும் சம்பவம்
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்