நவம்பரில் பாசடாலைகள் ஆரம்பம்!
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருக்கின்ற அரச பாடசாலைகள் பெரும்பாலும் நவம்பர் மாதம் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கல்வி அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பாடசாலைகளை மீளத்திறப்பது தொடர்பில் நிபுணர்களிடமிருந்து அறிக்கை ஒன்றை வருகின்ற 13ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தற்போது கோவிட் தொழில்நுட்பக் குழு, கல்வி அமைச்சின் விசேட குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட தரப்பினரால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த குழு பெரும்பாலும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே பாடசாலைகளை மீளத்திறப்பதற்கான பரிந்துரையை முன்வைக்கும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.