பாடசாலை காவலாளி ‘ஐஸ்’ உடன் கைது!
கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகம்
கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்களில் 34 வயதுடைய நபர், அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இப்பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தனரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைதான சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.