போதைப்பொருளுடன் கைதான பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்
அநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 30 வயதுடைய அதிபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் விளக்கமறியல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபரின் மனைவி பேலியகொடை மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அதிபர், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 185 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் அடங்கிய பொதியுடன் கடந்த 05 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.