மன்னார் மனித புதைகுழியில் ஸ்கேனர் பரிசோதனை
மன்னார் சதொச வளாக மனித புதைகுழி பகுதியில் ஸ்கேனர் இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித புதைகுழி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (7) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேவேளை ஏற்கனவே அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களைக் கொண்டு உயிரிழந்தவர்களின் வயது உள்ளிட்ட விபரங்களை ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மன்னார் மனித புதைகுழி வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.