சனி பகவானின் அஸ்தமனம் ; இந்த ராசிகளுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இவர் பெயர்ச்சி அடையக்கூடிய ராசிக்கு அருகில் சூரிய பகவான் வரும்போது, சனி பகவான் அஸ்தனம் ஆகிறார். இதனால், சனி அஸ்தமனத்தின்போது, சில ராசியை சேர்ந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
அந்த வகையில், மார்ச் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீன ராசியில் சனி அஸ்தமனம் ஆகுகிறார். இதன்பிறகு, சனி 41 நாட்கள் அஸ்தமிப்பில் இருந்து பின்னர், ஏப்ரல் 22ஆம் திகதி மீண்டும் உதயமாகுகிறார். சனியின் அஸ்தமனத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிஷ்டம் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிஷ்டம் பெறும் ராசிகள்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனம் மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் வணிக ரீதியாக சிறப்பான பலன்களை பெறுவார்கள். முதலீடு செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் அமைதியான மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.வருமானமும் உயரக் கூடும். தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

மிதுனம்: சனி அஸ்தமனம் காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் வேலை, தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையக் கூடும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

மகரம்: சனி அஸ்தமனம் காரணமாக, மகர ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் கிடைக்கும் உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். கடன் தொல்லையில் இருந்து சிறிது விடுபவீர்கள். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
