இன்று சனி வக்ர பெயர்ச்சி ; இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்!
ஜூலை 13, 2025 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதாவது, சனி பகவானின் பின்னோக்கி செல்லும் காலம், ஜூலை 13 அன்று காலை 7.24 மணியளவில் தொடங்கி பின் நவம்பர் 28, 2025 அன்று காலை 7.26 மணியளவில் இயல்பு நிலையில் பயணிக்கிறார்.
சுமார் 138 நாட்களுக்கு நிகழும் இந்த சனி வக்ர பெயர்ச்சி, குறிப்பிட்ட சில ராசிகாரர்கள் நேர்மறை பலன்களை பெறுகின்றனர்.
பலன்களை பெறும் ராசிகாரர்கள்
ரிஷபம் (Taurus Zodiac Sign): சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் கலவையான பலன்கள் கிடைக்கும். நன்மைகளைப் பெற நேரம் ஆகலாம், ஆனால் அனைத்து வேலைகளும் நிறைவடையும். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.
புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த 138 நாட்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
துலாம் (Libra Zodiac Sign): சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நல்ல பலன்களைத் தரும். வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் அல்லது சொத்து உங்களுக்குக் கிடைக்கலாம்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுதல்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தனுசு (Sagittarius Zodiac Sign): சனி வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியையும் வசதிகளையும் குறைக்கும். வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வேலையில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு மாறுவதற்கான சூழ்நிலை இருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் கவனமாக வாகனம் ஓட்டுங்கள். புதிய வீடு கட்டவோ அல்லது புதிய நிறுவனம் அமைக்கவோ வாய்ப்பு ஏற்படும்.
மகரம் (Capricorn Zodiac Sign): சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதில் சிரமம் இருக்கலாம். வேலை செய்பவராக இருந்தால் உங்கள் நடத்தையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். தொழிலதிபராக இருந்தால், பெரிய லாபம் கிடைக்கும். 138 நாட்களுக்கு குடும்ப சூழலும் மிகவும் நன்றாக இருக்கும்.