சனிக்கிழமை வரும் சஷ்டி விரதத்தால் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?
சஷ்டியில் முருகனை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கி விடும். அதுவே சனிக்கிழமையில் வரும் சஷ்டியில் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் சஷ்டி. இது சில குறிப்பிட்ட கிழமைகளுடன் சேர்ந்து வரும் போது அதற்கு அதிக மகத்துவம் உள்ளது. பொதுவாக செவ்வாய் கிழமை தான் முருகனின் வழிபாட்டிற்கு உரியது.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சஷ்டி திதி இணைந்து வருவது மிக சிறப்பானதாகும். அதே போல் சனிக்கிழமையில் சஷ்டி திதி இணைந்து வருவதும் தனிச்சிறப்புடையதாகும்.
ஆடி மாத சஷ்டியின் சிறப்பு
ஆடி மாதம் அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி, கேட்ட வரங்களை முருகனிடம் பெறுவதற்கான சிறந்த நாளாகும். இந்த நாளில் முருக பக்தர்கள் பலரும் உபவாசமாக இருந்தும், பால், பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருந்து வழிபடுவார்கள்.
ஆடி மாத வளர்பிறை சஷ்டியான ஆகஸ்ட் 10ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாட்டினை வீட்டில் செய்வதால் மிக உயர்வான பலன் கிடைக்கும். கேட்ட வரங்களை முருகப் பெருமான் அருள்வார்.
இந்த வழிபாட்டினை அனைத்து செவ்வாய்கிழமை, சஷ்டி, கார்த்திகை போன்ற நாட்களிலும் செய்வது சிறப்பானதாகும்.
வழிபாட்டு முறை
சனிக்கிழமையில் வரும் சஷ்டி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் சட்கோண கோலமிட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் அல்லது பாலாடை ஆகியவற்றில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
முருகனுக்கு நைவேத்தியமாக கற்கண்டு, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, முந்திரி போன்ற ஏதாவது ஒன்றை படைக்கலாம். கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி அளவிற்கு மஞ்சள் தூளை எடுத்து, அந்த தட்டு முழுவதும் மஞ்சள் தூள் இருக்கும் படி பரப்பி வையுங்கள்.
பிறகு அந்த மஞ்சளின் மீது வெற்றிலை காம்பு அல்லது உங்களின் வலது கை மோதிர விரலால் உங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை சுருக்கமாக எழுதுங்கள்.
பூஜை செய்யும் முறை
6 என்ற எண்ணிக்கையில் செவ்வரளி அல்லது ரோஜா என ஏதாவது சிவப்பு நிற மலர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முருகனின் மூல மந்திரத்தை 6 முறை சொல்லி, 6 மலர்களையும் படைக்க வேண்டும். பிறகு கற்பூரம் காட்டி வழிபட்டு விட்டு, அந்த தட்டினை அப்படியே பூஜை அறையில் அனைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் அந்த மஞ்சள் தூள் நீங்கள் சமையலுக்கோ அல்லது பூஜைக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சளில் இப்படி உங்களின் கோரிக்கையை எழுதி முருகனின் படத்திற்கு முன் வைத்து வழிபட்டால், உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் முருகன் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.