பௌத்தர்கள் மத்தியில் சரத் வீரசேகரவுக்கு இப்படி ஒரு நிலை!(Video)
கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு நபரொருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று காலை முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பேரணியில் பெருமளவான பௌத்தர்கள்
பேரணியில் பெருமளவான பௌத்த பிக்குகள், நாடளுமன்ற உறுப்பினர்களான சன்ன ஜயசுமன மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல்வாதிகள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் சரத் வீரசேகரவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு தற்போது சிங்கள மக்களை ஒன்றிணைக்க வருவதாக சரத் வீரசேகரவிற்கு அந்நபர் எதிர்ப்பை வெளியிட்டார்.