இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர

Mullaitivu Parliament of Sri Lanka Sarath Weerasekara
By Shankar Oct 03, 2022 11:59 PM GMT
Shankar

Shankar

Report

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர (Sarath Weerasekera) நேற்றுமுன்தினம் (01-10-2022) வெளியிட்டுள்ள அறிகையொன்றில் “‘இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்​றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை என்று” உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

‘இராவணன் (இராவணேஸ்வரன் அல்ல) என்று அழைக்கப்படும் ஒரு மன்னன் இலங்கையில் ஆட்சி செய்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

புராணக்கதைகளின்படி, அவர் இந்தியாவில் சீதையை (இராமரின் மனைவி) கடத்தி, தனது புகழ்பெற்ற யந்திரயாவில் (மயில் விமானம்) இலங்கைக்கு அழைத்து வந்தார்.

இராவணன் இந்து வரலாற்று நுாலான இராமாயணத்தின் முக்கிய எதிரியாக குறிப்பிடப்படுகின்றார்’ என்றும் சரத் வீரசேகர எம்.பி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கடைகளை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் இழுபறிநிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த கடைகளை பெரும்பான்மையின வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அது தொடர்பில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி சரத் வீரசேகர எம்.பி உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் இலங்கையில் இராவணேஸ்வரன் என்ற அரசர் இருந்ததில்லை என்னும் கருத்தொன்றினையும் பதிவு செய்திருந்தார்.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

அக்கருத்து தொடர்பாக தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக சரத் வீரசேகர எம்.பி நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு’ என்ற அமைப்பின் செயற்பாட்டாளர் வினோத் பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு தமது அமைப்பின் ஊடக அறிக்யொன்றினை வழங்கியிருந்தார்.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

குறித்த ஊடக அறிக்கையில் இராவணன் என்ற அரசன் இல்லை என்றும், இலங்கையில் சிவ வழிபாடு இல்லை என்றும் நான் கூறியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

செப்டெம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை கவனமாகக் கேட்குமாறு சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பினரையும், அதன் செயற்பாட்டாளர் பாலச்சந்திரனையும் கேட்டுக் கொள்கிறேன்.

எனது உரையில் எந்தவொரு இடத்திலும் இராவணன் என்றழைக்கப்படும் அரசன் இல்லை என்றோ சிவவழிபாடு சம்பந்தமாக எதனையுமோ நான் ஒருபோதும் கூறவில்லை.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

இராவணேஸ்வரன் என்று ஒரு அரசன் இருந்ததில்லை என்றே கூறியுள்ளேன். பாலச்சந்திரன் என்னை இனவாதி என்று கூறி, சிறுபிள்ளைத்தனமாக இராவணன் உண்மையில் இருந்தான் என்பதை ஆவணங்களில் உள்ள பல்வேறு புத்தகங்களைக் குறிப்பிட்டு நிரூபித்துக் காட்டுகிறார்.

இராவணன் என்று ஒரு மன்னன் இல்லை என்று நான் ஒருபோதும் குறிப்பிடாமையினால், அவருடைய முழு அறிக்கையும் அர்த்தமற்றதாகிறது.

இராவணன் (இராவணேஸ்வரன் அல்ல) என்று அழைக்கப்படும் ஒரு மன்னன் இலங்கையில் ஆட்சி செய்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘ரா’ – என்றால் சூரியன் மற்றும் வன -என்றால் வன்ஷயா அல்லது பழங்குடி என்று அர்த்தமாகும்.

எனவே இராவணன் என்றால் ‘சூரியனின் பழங்குடி’ என்று பொருள். அவர் எல்லாத் திறமைகளிலும் கலைகளிலும் வல்லவராக இருந்தார்.

மன்னன் இராவணன் எப்போதும் இராவணன் என்றே அழைக்கப்படுகிறார், இராவணேஸ்வரன் என்று அல்ல.

பாலச்சந்திரன், சமூக நல்லிணக்கத்தில் உண்மையாக அக்கறை கொண்டவராக இருந்தால், கண்ணியமான, அமைதியை விரும்பும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை (பெரும்பாலும் TNA மற்றும் ACTC) கேட்டுக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட தமிழ் எம்.பி ஒருவர் இராவணேஸ்வரனைக் குறிப்பிட்டு தனது இனவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றார். அதனால்தான் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்றேன்.

முல்லைத்தீவு குருந்து விகாரையில், தொல்பொருள் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட 2000 வருடங்கள் பழைமையான தூபி உள்ளது. புத்தரின் திருவுருவங்களை அதில் வைப்பதற்கு சமய வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் குண்டர் குழுக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

மேலும் தூபிக்கு ஒரு மலர் கூட வைக்க முடியாமல் தலைமைப் பீடாதிபதிகளும் மகாசங்கத்தினரும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பும் இதே குண்டர்கள் குழுக்கள் அதிகாரபூர்வமான இடத்தை ஆய்வு செய்வதற்கு வருகை தந்த குழுவைத் தாக்கி விரட்டியடித்தனர்.

போரின் உச்சக்கட்டத்தில் அம்பாறை கோணகலையில் கருவுற்றிருந்த சிங்கள தாய்மார்களைக் கூட பயங்கரவாதிகள் கொன்று குவித்த போது, கொழும்பில் வீதிகளில் ‘இந்து வேல்விழா’ ஊர்வலம் நடத்துவதற்கு சிங்களவர்கள் ஒருபோதும் இடையூறு செய்யவில்லை என்பதை பாலச்சந்திரனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

அப்படித்தான் ஏனைய மதங்களை நாங்கள் மதிக்கிறோம். திருகோணமலையில் கோணேஸ்வரர் கோயிவிலுக்குச் செல்லும் வீதியில் 60 பெட்டிக்கடைகளில் சிங்களவர்களே அதிகம் காணப்படுகின்றனர்.

தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குறித்த பெட்டிக்கடைகள் பொலித்தீன் மற்றும் மரத்துண்டுகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதனால் கடலின் அழகு பார்வைக்கு இடையூறாக உள்ளது.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

இதனை மறுபுறம் மாற்றி புதிய ஒரு ஒழுங்கில் நிர்மாணிப்பதற்கு ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

குறித்த கடைகளை அதே நபர்களுக்கு கொடுக்க திருக்கோணஸ்வர கோயில் குழு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அனுமதி வழங்கியபோதும், தமிழ்த் தரப்பு எம்.பி.க்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அங்குள்ள அனைத்து சிங்களவர்களின் கடைகளையும் அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

தங்கள் வாதத்தை நியாயப்படுத்த இராவணேஸ்வரன் என்ற அரசனைக் குறிப்பிட்டார்கள்.

இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை... சர்ச்சையில் சிக்கிய சரத் வீரசேகர | Sarath Weerakera Surrendered Ravana Sri Lanka

பாலச்சந்திரன் உண்மையில் சமூக நல்லிணக்கத்தில் அக்கறை கொண்டிருந்தால், என்னை இனவாதி என்று கூறும் முன், அது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அனைத்து உரைகளையும் முழுமையாக கேட்குமாறு கூறிக்கொள்ள விரும்புகின்றேன.

பாலச்சந்திரனின் தகவலுக்கு இன்னுமொன்றினை கூறிக்கொள்கின்றேன். நான் கடற்படையில் பணியிலிருந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளேன் என்று கூறுவதை பொருமையாகக் கருதுகிறேன்.

நானும் சிங்கள பௌத்த சகாக்களும் பல சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு இரத்த தானம் செய்துள்ளோம்.

அப்படியானால் யார் உண்மையான இனவாதிகள் என்று கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US