தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பை கோரும் சரத் பொன்சேகா
2019 இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது போராட்டகாரர்களால் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே சரத் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதன்போது அவர் மேலும் கூறிகையில்,

ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும்
இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய முடியும் எனக் கூறினார்.
அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும் என சரத் பொன்சேகா கூறினார்.
பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பேருக்கு, கம்பஹா விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.