கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அவரது தாயாரும் சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்ததற்காகவும், அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது காவல்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.