சனிப்பெயர்ச்சியால் தங்கம் வாங்கும் யோகம் பெற்றவர்கள் எந்த ராசிகாரர்கள் தெரியுமா?
திருக்கணித பஞ்சாங்கப்படி 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி சனிக்கிழமை (29) தொடங்கியது. அதாவது கும்ப ராசியில் இருந்த சனி மீன ராசிக்கு மாறி உள்ளார்.
இதனால் 12 ராசிகளுக்கும் வாழ்க்கை ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல மாற்றம் உருவாக காத்திருக்கிறது. அப்படியாக, இந்த சனிப்பெயச்சியால் எந்த ராசிக்காரர்கள் தங்கம் வாங்கும் யோகம் பெற போகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் வாங்கும் யோகம்
கடகம்: கடக ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சிக்கி கொண்டு இருந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபடுகிறார்கள். இதனால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். அதோடு இவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் நிறைய தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வேலையில் நல்ல மாற்றம் இருக்கும். இவர்கள் கட்டாயம் தங்கம் வெள்ளி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு இந்த கால கட்டம் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான சேமிப்புகளை கட்டாயம் இந்த சனி பெயர்ச்சியில் செய்வார்கள். அதில் மிக முக்கியமாக தங்கம் இடம் பெரும். மேலும் இவர்களுக்கு நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும்.