சனி உதயத்தின் தாக்கம் ; அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர்கள்
இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள சனி பெயர்ச்சியை பார்க்கப்படுகின்றது. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
சனி பெயர்ச்சிக்கு பின் நிகழவுள்ள சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் சனி அருளால் பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மற்றும் சனி உதயத்தின் தாக்கத்தால் சனி பகவானின் முழுமையான ஆசிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் தொடர்ந்து முன்னேறும். பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியும் அதன் பின் வரும் சனி உதயமும் அதிக அளவில் நன்மை பயக்கும். நிதி நிலை முன்னேறும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீட்டிலிருந்து திடீரென்று நிதி லாபம் கிடைக்கக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பகவானின் உதயத்தால், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கும். செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.