ராசியை மாற்றிய சனி பாகவன்... இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்ட மழைதான்!
சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் தனது ராசியை மாற்றியுள்ளார். அவர் இப்போது மகர ராசியில் வக்ரமாக கோச்சாரம் செய்கிறார், அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருக்கிறார்.
மகர ராசியில் சனி பகவானின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது மிகவும் நல்ல நேரத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த காலத்தில், மகர ராசியில் சனி எதிர் திசையில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களின் விதியை அவர் மாற்றுவார். இந்த ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.
சனி பகவான் ஜூலை 2022 இல் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிற்போக்குத்தனமாக நுழைந்தார். அக்டோபர் 2022 வரை இந்த நிலையில் இருப்பார்.
அதாவது சனி பகவான் மகர ராசியில் சுமார் 3 மாதங்கள் பிற்போக்கு நிலையில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு பலன் தருவார். அதிக அதிர்ஷ்டத்துடன் கூடிய இந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி: சனி பகவான் மேஷ ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். ஜாதகத்தின் இந்த வீடு தொழில் மற்றும் வேலை சார்ந்தது.
எனவே, அதன் தாக்கத்தால், இந்த காலகட்டத்தில் அவர்களின் கௌரவமும் பதவியும் அதிகரிக்கும். வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி செய்யும் பாணி மேம்படும். மரியாதையும் புகழும் கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
மீனம் ராசி: மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கியுள்ளன. ஏனெனில் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் சனி 11 ஆவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார்.
ஜோதிடத்தில், 11 ஆவது வீடு வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பெரும் பணத்தைப் பெறலாம்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக அதிகப்படியான லாபம் கிடைக்கும். ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை நீங்கள் இந்த நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இப்போது வாங்கலாம். சனிபகவானின் அருளால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு ராசி: சனி பகவானின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். அதே போல் பங்குச் சந்தை மற்றும் லாட்டரியில் இப்போது லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
பணி இடத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவு உயர்வி கிடைக்க ஏற்ற காலமாக இது இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலத்தில் சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் சாதகமான விளைவுகள் கிடைக்கும்.