மறைந்த சனத் நிஷாந்த விபத்து சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு கார் மோதிய கொள்கலன் லொறியின் சாரதியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்றையதினம் (12-02-2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கொள்கலன் லொறியின் சாரதி முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் மரணம் தொடர்பில் தற்போது பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்கலன் லொறியின் சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி சனத் நிஷாந்தவின் மனைவி, சட்டத்தரணி சமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.