மட்டக்களப்பில் ஶ்ரீநேசனிற்கு எதிராக நேற்றைய தினம் இடம் பெற்ற பெரும் சதி
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் 6, ம் இலக்கத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஞானமுத்து ஶ்ரீநேசனின் செல்வாக்கை குறைப்பதற்கான முயற்சிகள் பல நேற்று மாலை பட்டிருப்பு பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
மேலும் தெரியவருவதாவது,
பட்டிருப்பு தொகுதியில் செல்வாக்கு உடைய தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அவருடைய விருப்பு எண்ணுடன் 1. ம் இலக்க வேட்பாளர் 7, ம் இலக்க வேட்பாளரை குறிப்பிட்டு ஶ்ரீநேசனின் விருப்பு எண் 6, தவிர்த்து துண்டுப்பிரசுரங்களை ஆதரவாளர்களை கொண்டு வினியோகிக்கிறார்.
இதேபோல் மட்டக்களப்பு தொகுதியில் தன்னுடைய இலக்கத்துடன் 7, ம் இலக்கத்தையும், கல்குடா தொகுதியில் தன்னுடைய இலக்கத்துடன் 2, ம் 4, ம் இலக்கங்களையும் குறிப்பிட்டு ஶ்ரீநேசன் 6, ம் இலக்கத்துக்கு புள்ளடி இடவேண்டாம் என மிகவும் தீவிரமான இறுதிக் கட்ட பிரச்சாரம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை விட ஶ்ரீநேசனுக்கு ஆதரவான கிராமங்களுக்கு மூன்று நான்கு பேரை நாளாந்த சம்பளம் வழங்கி ஶ்ரீநேசன் வெற்றியடைய மாட்டார் அவரை ஆதரிக்கவேண்டாம் எனவும் குறித்த நபர் விசமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.