விமான நிலைய அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த பெண்; பயணப்பையில் இருந்த பொருள்!
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடியே 66 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 கோடியே 66 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகை
அங்கொட, ஹல்கஹதெனிய வீதிப் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கை வந்த அவர், தனது பயணப் பொதிக்குள் 12 பொதிகளாகப் பொதியிடப்பட்டிருந்த 916 கிராம் எடையுடைய தங்க வளையல்கள் மற்றும் சங்கிலிகளை எடுத்துவந்திருந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தங்க நகைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.