வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட உயிரிழந்த கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள், வௌிநாட்டு இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரினங்களின் உடல் மாதிரிகளையும் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீயினால் கடலில் வீழ்ந்த கொள்கலன்களின் எண்ணிக்கை, அதன் பாதிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் அமைப்பின் ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டுள்ளார்.