இன்று ஒரே நாளில் பலரின் மோட்டார் சைக்கிளை பறித்த சம்மாந்துறை பொலிஸார்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைதுசெய்யப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
ஒரே நாளில் 10 வீதி விபத்து
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சனிக்கிழமை (07) காலை வேளையில் மாத்திரம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.