சலேவின் உடல்நிலை குறித்து அவரது மனைவி வெளியிட்ட தகவல்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதுவரை உணவோ அல்லது நீரோ உட்கொள்ளவில்லை என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று சுரேஷ் சலேயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியேறிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அவர் இன்னும் உணவோ, நீரோ எதுவும் உட்கொள்ளவில்லை. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சேலைன் வழங்கப்படுகிறது. ஆனால் அவர் உண்பதோ, குடிப்பதோ இல்லை.
தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் எண்ணமும் இல்லை" என மனோரி சலே கூறினார்.
இதற்கிடையில், சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல்நிலை தொடர்பில் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.