அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை
தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய விடுமுறை கூட கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை அவர்களது சேவைக்காலம் முழுவதையும் பாதிப்பதாகவும், இந்நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதது ஏன் என்று வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.