"நான் பிரேக்கப் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் தற்கொலை செய்திருப்பேன்"....சமந்தாவின் சோகப் பக்கம்
நடிகை சமந்தா வர்கள் சமீபத்தில் தான் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார். இதற்கு முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சமந்தா நாக சைதன்யாவை மட்டும் விரும்பவில்லை.
அதற்கு முன்னர் சில நடிகர்களுடன் காதலில் இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதுமட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு அவர்களுடன் கைகோர்த்து வந்த சம்பவங்கள் எல்லாம் ஏராளம் உள்ளது.
ஏகப்பட்ட பிரேக்கப் சம்பவங்களுக்கு பிறகு தான் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபல நடிகர்களுடன் பிரேக்கப் செய்தபோது கொடுத்த பேட்டி ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சமந்தா சொன்ன விஷயம் தான் உச்சகட்டம். அதில் அவர் கூறியதாவது,
"நல்லவேளை நான் அவரை பிரேக்கப் செய்துவிட்டேன்.இல்லையென்றால் இந்நேரம் நான் தற்கொலை செய்திருப்பேன் என்றும்,மேலும் சாவித்திரி அம்மாவுக்கு நடந்த கொடுமை தான் தனக்கும் நடந்திருக்கும் "என கூறினார்.
இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட நபர் சித்தார்த் ஆக இருக்கலாம் என ரசிகர்கள் பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.