திருமண பந்தத்தில் இணைந்தார் சரிகமப புகழ் சபேசன்
அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த, சரிகமப புகழ் சபேசன், தனது காதலியான ரிக்ஷானா (Rithika Sujith / Rikshana) திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் புத்மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுமண தம்பதிகளுக்கு குவியும் வாழ்த்து
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப.
அதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாத்துறையிலும், கச்சேரிகளில் பாடியும் வருகிறார்கள். அந்தவகையில் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சபேசன் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .

தனக்கென ரசிகர்களை கொண்டிருந்த சபேசன், அந்த சீசனில் 2 ஆவது இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றார்.
இன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்த சபேசனுக்கு , சரிகமப’ சக போட்டியாளர்கள், இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.