இந்த நவராத்திரியில் பொற்காலத்தை பெறப்போவது இவர்கள் தான் ; உங்கள் ராசியும் இருக்கா?
நவராத்திரி காலகட்டம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி, இத்திருவிழாக் காலத்தில் பல கிரகச் சேர்க்கைகள் உருவாகவுள்ளதால் ஜோதிடரீதியாகவும் மிகவும் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி சில ராசிக்காரர்களுக்குக் குறிப்பாகச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.
இந்த பதிவில் நவராத்திரி காலகட்டத்தில் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: இது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அது அவர்களுக்கு கைகொடுக்கும். அவர்கள் அதிகளவு சம்பாதித்து அதை நன்றாக நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அளவிற்கு சம்பாதிப்பார்கள். குடும்பம், பரம்பரை அல்லது இரண்டிலிருந்தும் செல்வம் அல்லது சொத்துக்களைப் பெறுவதற்கான காலகட்டம் இது. விலையுயர்ந்த பொருட்கள், நகைகள் மற்றும் ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நல்ல உறவைப் பேணவும், மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பராமரிக்கவும் முடியும்.
கடகம்: கடக்க ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி காலகட்டம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அவர்கள் முதலீடுகளைத் திட்டமிட்டால் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த நவராத்திரியின் போது சாதகமான பலன்களை அளிக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் காண்பார்கள். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது சிறந்த நேரம். அவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. நீதிமன்றம் அல்லது சட்ட சிக்கல்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றியைப் பெறலாம்.