சாதனைத்தமிழன் யாழ் வியாஸ்காந் குறித்து வேகப்பந்து வீச்சாளர் பெருமை
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாதனைத்தமிழன் வியாஸ்காந்தை பற்றி இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தவாஸ் பெருமையாக கூறியுள்ளார்.
யாழ் மக்களுக்கும் தமிழர்களுக்கும் பெருமையை தேடிக்கொடுத்த வியாஸ்காந் , இலங்கை கிரிகெட்டில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் வியாஸ்காந்தை 2018 யில் தான் முதலில் சந்தித்தேன். அவர் 2020 முதல் IPL போட்டியில் பங்குபற்றினார். சிறப்பாக விளையாடினார். ஆனால் இதுவரை 2 முதல்தர போட்டிகளில்தான் விளையாடியுள்ளார்.
அவரை சிறந்த ஒரு கழகத்தில் சேர்த்து தயார்படுத்தினால் அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரிய பங்களிப்பை வழங்குவார். பயமில்லாமல் பந்து வீசுகிறார். அழுத்தமான நேரங்களில் எப்படி சிறப்பாக பந்து வீச வேண்டும் என தெரிந்து வைத்துள்ளார் என சமிந்தவாஸ் கூறியுள்ளார்.