உக்ரைனில் அமெரிக்க ஊடகவியலாளரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை!
உக்ரைனில் நேற்று முன்தினம் (13-03-2022) ரஷ்ய துருப்புகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் ப்ரெண்ட் ரெனாட் (Brent Renaud)சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை உக்ரைன் தலைநகர் கீவ்வை கைபற்ற ரஷ்ய துருப்புகள் தீவிரமாக செயற்பட்டு கொண்டு வருகின்றனர். மேலும், உக்ரைன் போர்க்களங்களில் ஏராளமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் துணிச்சலோடு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் Brent Renaud என்பவர் நேற்று முன்தினம் ரஷ்ய துருப்புகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இலக்காகி உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் இரு ஊடகவியலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.