உக்ரைனில் கைதான ரஷ்ய இராணுவ வீரர்கள்; குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஷ்யா - உக்ரை இடையில் தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை உக்ரைன் இராணுவத்தினர் தாங்கள் கைதுசெய்துள்ள ரஷ்ய படைவீரர்களை காண்பிக்கும் பல கணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
உக்ரைனின் உள்துறை அமைச்சின் டெலிகிராம் சனல் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காயமடைந்த நிலையில் காணப்படும் ரஷ்ய வீரர் ஒருவர் தனது பெயரையும்,Leonid Paktishev தான் ரொஸ்டொவ் பிராந்தியத்தை சேர்ந்த சினைப்பர் படையணியை சேர்ந்தவர் எனவும் கூறுகின்றார்.
குறிப்பிட்ட டெலிகிராம் சனல் கைதுசெய்யப்பட்ட பல ரஷ்ய வீரர்களை காண்பிக்கும் வீடியோக்களை வெளியானதை தொடர்ந்து, கைதான வீரர்களின் ரஷ்ய பெற்றோர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் உக்ரைன் மீதான படையெடுப்பில் தங்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டமை குறித்து தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்டிசெவ்வினை தங்களிற்கு தெரியும் என்பதை கார்டியனிற்கு தெரிவித்த மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் நேசத்திற்குரியவர் கைதுசெய்யப்பட்டதை காண்பிக்கும் வீடியோவை பார்த்ததும் தாங்கள் அதிர்ச்சியும் சீற்றமும் அடைந்ததாக கூறியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள ரஷ்ய வீரரின் சகோதரி ஒருவர், கைதுசெய்யப்பட்ட எனது சகோதரரின் வீடியோவை எனக்கு அனுப்பியிருந்தார்கள் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்,அவர் அங்கு போரிடுகின்றார் என்பது எனக்கு தெரியாது என கூறியதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
அவர் இராணுவத்திலிருப்பது எனக்கு தெரியும் அவர் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டுள்ளது எனக்கு தெரியாது அவருக்கே அது தெரியாமலிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பில்தனது சகோதரரின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு அதற்கு பதிலளிப்பதற்கு தான் தகுதியானவர் இல்லை என தெரிவித்துள்ள சகோதரி எனினும் யுத்தம்முடிவிற்கு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரஷ்யா இதுவரை அந்த வீடியோக்கள் குறித்து எதனையும் தெரிவிக்காததுடன் போர்முனையில் உள்ள வீரர்களின் நிலை குறித்து தகவல்களையும் வெளியிடுவதை தவிர்த்துவருகின்றது.
அதேவேளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு முதல்தடவையாக ஞாயிற்றுக்கிழமைதோழர்கள் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன ஆனால் உக்ரைனின் இழப்பு இதனை விடபலமடங்கு எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
