332 பயணிகளுடன் இலங்கை வந்த ரஷ்ய விமானம்!
ரஷ்ய விமான சேவை இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று புதன்கிழமை (01) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிகப் பெரிய விமான சேவையான அசூர் ஏர் (Azur Air) இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 332 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
முதலாவது நேரடி விமானம்
முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.
அதோடு, அவர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதேவேளை ரஷ்யாவில் வெனுகோவ், டோல்மோசேவ், க்ரானோயார்ஸ்க் மற்றும் சென் பீட்டர்ஸ்பர்க் ஆகிய பகுதிகளிலிருந்து வாரத்திற்கு நான்கு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.