நிவாரணப் பொருட்களுடன் வந்தது ரஷ்ய விமானம்
பேரிடரால் பாதிக்கபப்ட்ட இலங்கைக்கு , ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இன்று புதன்கிழமை (10) ரஷ்ய கூட்டமைப்பினால் 35 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

காய்கறி எண்ணெய், சீனி, அரிசி
மொபைல் பவர் ஸ்டேஷன் (Mobile Power Station), காய்கறி எண்ணெய், சீனி, அரிசி மற்றும் கூடாரங்கள் (Tents) என்பன விமானத்தில் கொண்டுவரப்பட்டிருந்தன.
இவற்றை கொண்டுவந்த மிகப்பெரிய ரஷ்ய சரக்கு விமானமான இலியுஷின் IL-76 விமானம் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின்போது இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் லெவன் ஜாகார்யன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா, பாதுகாப்பு துணை அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம முதலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைந்திருந்தனர்.