சொந்த நாட்டின் மீது கோவப்பட்டு ரஷ்ய விமானி வெளியிட்ட காணொளி! இணையத்தில் வைரல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உலகில் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றான ரஷ்ய துருப்புகளை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர்.
இதனால் இந்தப் போர் 18 வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைனில் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
A Russian pilot tells passengers that he believes “the war in Ukraine is a crime,” adding “I think each sensible citizens will agree with me and will do everything to make it stop.” Rare to see public opposition to the war given the consequences such a statement will have pic.twitter.com/55h18mWI9U
— Pjotr Sauer (@PjotrSauer) March 11, 2022
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறிப்பாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த மார்ச் 10ஆம் திகதி துருக்கியில் சந்தித்துப் பேசினர்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் காரணமாக ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த போரினால் உக்ரைனில் இருக்கும் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், ரஷ்யாவின் நடவடிக்கை தவறானது என்றும் அவர் காணொளியில் குறிப்பிடுகிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அந்த காணொளியில் அழைப்பு விடுக்கிறார்.
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த காணொளியில் ரஷ்ய விமானி, "மக்களே, உக்ரைனில் போர் என்பது ஒரு குற்றம். அறிவார்ந்த மக்கள் அனைவரும் இந்த விடயத்தில் என்னுடன் உடன்படுவார்கள் என நினைக்கிறேன்.
இந்தப் போரைத் தடுக்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று அவர் அந்த காணொளியில் அந்த விமானி தெரிவித்துள்ளார். இந்த காணொளியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் (Aeroflot) துணை நிறுவனமான போபேடாவில் (Pobeda) அவர் விமானி பணிபுரிவதாக உக்ரைன் தூதர் ஓலெக்சாண்டர் ஷெர்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த உடனேயே உலக அளவில் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கின. அப்படி முதலில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்த ரஷ்ய நிறுவனங்களில் இந்த ஏரோஃப்ளோட் நிறுவனம் முதன்மையானதாகும்.