மட்டக்களப்பில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (10-01-2025) இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை 7.30 மணியளவில் பாசிக்குடா கடலில் நீராடும் போது 64 வயதுடைய ரஷ்யா நாட்டு வெள்ளைக்காரர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.