உக்ரைன் அதிபரை தீர்த்துக்கட்ட ரஷிய ரகசிய கூலிப்படை ஏற்பாடு
உக்ரைன் அதிபரை தீர்த்துக்கட்ட கீவில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், தன்னை கொலை செய்வது மூலம் உக்ரைனை வீழ்த்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறிவருகிறார்.
இதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy)யை கொலை செய்ய தலைநகர் கீவில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய அதிபர் புடினின் நெருங்கிய கூட்டாளிகளால் இயக்கப்படும் வாக்னர் எனப்படும் போராளிகள் குழு ஆப்பிரிக்காவில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து, அவர்கள் மூலம் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy)யை கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.