உக்ரைனில் சொந்த படையினரால் கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி: வெளியான பகீர் தகவல்!
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev),என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev) பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கையின்படி கர்னல் மெட்வெடேவ் (Colonel Yuri Medvedev) "கொல்லப்பட்டதாக" கூறப்பட்டது, பின்னர் அவர் காலில் காயம் அடைந்து பெலாரஸுக்கு வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உக்ரைனில் ரஷ்ய படைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தெளிவை அளிக்கிறதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.