உக்ரைனில் பறிபோனது ரஷியாவின் பீரங்கி ; வைரலாகும் காணொளி
ரஷியாவின் பீரங்கியை உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் இணைத்து திருடிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதன்படி இன்று 7வது நாளாக ரஷியா உக்ரைன் மீது ஆக்ரோஷ தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் பீரங்கியை உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் இணைத்து திருடிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், ரஷிய எம்டிஎல்வி எனப்படும் ( துணை கவச கண்காணிப்பு வாகனம்) பீரங்கியை தனது டிராக்டருடன் இணைத்து திருடிச்செல்கிறார்.
No expert, but the invasion doesn’t seem to be going particularly well.
— Johnny Mercer (@JohnnyMercerUK) February 27, 2022
Ukrainian tractor steals Russian APC today ? pic.twitter.com/exutLiJc5v
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது,. இங்கிலாந்து எம்பி ஜானி மெர்சர்(MP Johnny Mercer) உட்பட, "நிபுணர் இல்லை, ஆனால் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாகத் தெரியவில்லை. உக்ரேனிய டிராக்டர் இன்று ரஷிய டாங்கியை திருடுகிறது ”. என கூறி உள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் (Alexander Sherpa) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தூதர் ஷெர்பா கூறும்போது, “உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் கடினமானவர்கள்” என்றார்.