ரஷ்ய விமான வழக்கு தள்ளுபடி!
ரஷ்யாவின் "ஏரோபுளோட்" விமான சேவைக்கு சொந்தமான விமான மொன்றுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு வணிக நீதி மன்றம் இன்று (15) உத்தரவிட்டது.
அவ் வழக்கில் 2ஆம் பிரதி வாதியாக பெயரிடப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனம் சார்பில் நகர்தல் பாத்திரம் ஒன்றினை முன் வைத்து கடந்த ஜூன் 28 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து சட்டமா அதிபர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்ன வாய்த்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவை அறிவித்ததுடன் கட்டணங்களுடன் வழக்கை தள்ளுபடி செய்தார்.
இவ்வழக்கு வணிக மேல் நீதி மன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க முன்னிலையில் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த தேவை சுமித் பெரேரா முன்னிலையில் நேற்றும் விசாரணைக்கு வந்தது.
இந் நிலையில் வழக்கை தள்ளுபடி செய்ததாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடட், ஏரோபுளோட் ரஷ்யன் ஏர்லைன்ஸ்க்கும் எதிராக இரு தரப்பினரும் இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதி முறைகளுக்கு இயங்க தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் இந் முறைப்பாட்டு மனு தொடர்பில், ரசிய விமான சேவை நிறுவனம் சார்பில் சட்டத்தரணி கலாநிதி லசந்த ஹெட்டி ஆராய்ச்சி ஆஜராவதுடன் மனுதாரரான அயர்லாந்து நிறுவனம் சார்பில் சட்டத்தரணி அனுர டி சில்வாவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி அவின்ர ரொட்டிக்கோ ஆஜராகின்றார்.
சட்டமா அதிபர் சார்பில் அர்ஷின் மேலதிக சொலிஸிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன தலைமையிலான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மஹென் கொபல்லாவ, ராஜீவ் குணாதிலக உள்ளிட்ட குழுவினர் ஆஜராணமை குறிப்பிடத்தக்கது.