விஜேதாச ராஜபக்ஷவிடம் உறுதியளித்த ரஷ்ய தூதுவர்!
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் (15-06-2022) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவ்வாறு இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இரு தரப்பு தொடர்புகளை மேலும் விரிவாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட கால நட்புறவின் அடிப்படையில், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும், தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்று தூதுவர் உறுதியளித்தார்.