உக்ரைன் மீது தடைசெய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்திய ரஷ்யா! வெளியான பகீர் தகவல்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனில் சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த குண்டு ஜெனீவா உடன்பாடு மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிந்தும் ரஷ்யா இந்த வெற்றிட குண்டைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்த அல்லது வெற்றிடக் குண்டுகள் வழக்கமான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.
அதற்கு பதிலாக அவை உயர் அழுத்த வெடிபொருளால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.