உக்ரைன் போரில் வேறு நாட்டு கூலிப்படையை களமிறக்குகிறதா ரஷ்யா? அமெரிக்க எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக ரஷ்யா வெளிநாட்டு கூலிப்படையினரை ஈடுபடுத்தும் சாத்தியப்பாடு தொடர்பாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி அளித்த பேட்டியில்,
“எங்களிடம் கவனத்திற்கு தகுதியான சான்றுகள் உள்ளன. ரஷ்யா உண்மையில் வெளிநாட்டு போராளிகளை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜோன் கிர்பியின் கூற்றுப்படி,
“150,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், உக்ரைனுக்குள் இராணுவ முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் எதிர்பாராத எதிர்ப்பு, நேட்டோவின் கவச ஆயுத துணைடன் யுத்தமிடும் உக்ரைன் படைகளை அதிக இழப்பின்றி சமாளிக்க, வெளிநாட்டு படைகளை களமிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அண்மைய நாட்களில் மேற்கு நாடுகள் எச்சரித்து வருகின்றன. இதனை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலும் தெரிவித்திருந்தது.
ஜோன் கிர்பியின் கூற்றுப்படி,
உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக சிரியாவில் இருந்து போராளிகளை அழைத்துவரும் மார்க்கத்தை ரஷ்யா ஏற்கனவே செற்படுத்த ஆரம்பித்து விட்டது.
”2015 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் இயங்கி வரும் ரஷ்யா, சமீப நாட்களில் அங்கு போராளிப் படையணிகளை பணியமர்த்தியுள்ளது, அவர்களின் தெரு சண்டை அனுபவம் கீவை கைப்பற்ற அனுமதிக்கும் என்று ரஷ்யா நம்புகிறது” என்று அமெரிக்க அரசாங்கம் கூறியது.
இந்த போராளிகளில் சிலர் ஏற்கனவே ரஷ்யாவில் இருப்பதாகவும், உக்ரைனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பயிற்சி பெற்று வருவதாகவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகின்றது.
அந் செய்தியில், சிரியாவில் இணைக்கப்படுபவர்களிற்கு மாதாந்தம் 200 - 300 டொலர் சம்பளம் என்ற ரீதியில் 6 மாத சம்பளம் வழங்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.