உக்ரைன் - ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை முடிவு! முக்கிய தீர்மானங்கள்
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டு பிரதிநிதிகளும் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் இடம்பெற்றிருந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷ்யப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னதாக ஆலோசனைக்காகத் திரும்புவதாகவும் இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரை முடிவுக்கு கொண்டு விருப்பம் தெரிவித்த ரஷ்யா!
உக்ரைன் உடன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கிய பொது சபை அவசர கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் போர் மூண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. ரஷ்யாவின் நலனை காக்கவே அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.