ரஷ்யா - உக்ரைன் போரை வைத்து ஈழப் போர் தொடர்பான கற்பனை கதைகள்!
ரஷ்யா - உக்ரைன் போரை வைத்து, ஈழப் போர் குறித்து பல கதைகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அவற்றில் அநேகமானவை கற்பனை கதைகள் என முகநூலில் ஜீவன் பிரசாத் (Jeevan prasad) என்பவர் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
உண்மையில் அநேக நாடுகள் பணத்துக்காகவும், அந்நாடுகளின் அரசியல் லாபத்துக்காகவும் ஈழ போராளிக் குழுக்களையும், இலங்கை அரசையும் பயன்படுத்தின என்பது பலருக்கு தெரியுமோ தெரியாது.
அநேக நாடுகள், ஈழ போராளிக் குழுக்களுக்கு, உதவியும் - பயிற்சியும் வழங்கிக் கொண்டே, இலங்கை அரசோடு வியாபாரங்களை செய்து கொண்டிருந்தன.
ஒரு நாடு, ஒரு புறம் போராளிக் குழுவொன்றுக்கு பயிற்சியளித்தது போல, மறு புறம் இலங்கை படையினருக்கு பயிற்சியளித்தது. பயிற்சிகளில் பங்கு கொண்டோருக்கு இந்த உண்மை தெரியும்.
ஒன்று பணத்துக்காக, அடுத்து அவர்களது அல்லது அவர்களது அரசியல் நண்பர்களின் தேவைக்காக ..... இவற்றை இன்னமும் பலர் உணரவில்லை.
அன்று உதவிக்கு வராத நாடுகள், இனியும் உதவும் என்பதும் கானல் கதைதான். இவ்வளவு நடந்தும் உண்மைகளை உணராதது அவர்கள் தவறல்ல. இன்னும் ஏமாந்த - ஏமாறவென ஒரு கூட்டம் இருக்கவே இருக்கிறது.
ஆயுத வியாபாரியான உக்ரைனுக்கே இந்த நிலை என்றால், ஆயுதம் வாங்கி அடித்த, அடிக்க நினைப்போர் நிலை என்ன? என முகநூலில் இந்த கருத்தை ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.