ரஷ்யா - உக்ரைன் போர் : எங்கிருந்து தோன்றின! தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

Russia Joe Biden Attack Ukraine War United State
By Shankar Feb 27, 2022 09:44 AM GMT
Shankar

Shankar

Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு கிழக்கு மாகாணங்களான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை 'சுதந்திர' நாடுகளாக அங்கீகரித்த பின்னர் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது, பின்னர் அவர்களின் 'கோரிக்கையின்' பேரில் அது ஒழுங்கை பராமரிக்க 'அமைதி காக்கும் படையை அனுப்பியது.

எனவே உலக வரைபடத்தில் இரண்டு புதிய 'தேசங்கள்' உள்ளன. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு" (DPR) மற்றும் "லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு" (LPR) ஆகியவை இப்போது சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.  

பொதுவாகவே ஒரு ரஷ்ய விரோதப்போக்கு மேற்கத்திய ஊடக மனோபாவங்களில் ஊறி அது பரவி பொதுப்புத்தியிலும் ஊறிப்போயுள்ளது, அது உலகம் முழுதுமே பரவியுள்ளது.

மாறாக அமெரிக்கா ஏதோ ஆபத்பாந்தவர்கள் போலவும் உலகிற்கு விடுதலை வாங்கித்தர வந்த மீட்பர்கள் போலவும் சில முதலீட்டிய ஊடகங்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருவதையும் பார்க்கிறோம்.

போர் என்பது காட்டுமிராண்டித்தனமானது, நம் உலகம் போருக்கான உலகம் அல்ல, அதுவும் கொரோனா வைரஸ் என்ற கொடிய போர் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட பிறகே பொருளாதார சீரழிவிலிருந்து மீள முடியாமல் தனிமனிதர்களும் குடும்பங்களும் ஏழை நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில் போர் என்பது பெரும் தீமை என்பதே சிறந்த பார்வையாக இருக்க முடியும், அணுகுமுறையாகவும் இருக்க வேண்டும், ஆனால் நமக்கு வரலாறும் தெரிவது அவசியம். ஏன் இந்தப் போர் என்பது, எங்கிருந்து இவை தோன்றின என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் இரண்டுமே ரஷ்ய மொழி பேசும் மக்கள் தொகை அதிகம். கிழக்குப் பகுதியை ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நாடுகளின் மீது இவர்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் தலைதூக்கியுள்ளன.

இந்நிலையில்தான் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் மீது மனித உரிமை மீறல்களை மேற்குடன் கைகோர்த்த உக்ரைன் கட்டவிழ்த்து விடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.   

இந்த கிழக்கு மாகாணங்களில் உள்ள ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 2014 முதல் ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்று வருகின்றனர், மேலும் இந்த இரண்டு கிழக்கு மாகாணங்களில் உள்ள தனது குடிமக்களுக்கு 800000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை ரஷ்யா வழங்கியது.

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் பல 'குடியரசுகள்' அதிலிருந்து பிரிந்த பின்னர் 1991 இல் சுதந்திரம் பெற்றது. மேற்கத்திய உலகம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைக் கொண்டாடியது மற்றும் உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் 'முடிவு' என்றும் முதலீட்டிய நாடுகளும் ஊடகங்களும் கொண்டாடித்தீர்த்தன.

மைக்கேல் கோர்பச்சேவ் துவக்கிய 'கிளாஸ்னோஸ்ட்' மற்றும் 'பெரெஸ்ட்ரோயிகா' அரசியலால் இவை அனைத்தும் நடந்தன. 1991-ல் சோவியத் யூனியனின் 3 பெரிய குடியரசுகளான ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் தனித்தனி நாடுகளாயின.

மேலும் 8 குடியரசுகளும் சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்து கொண்டன இதில் ரஷ்யாவுக்குப் பிறகு பெரிய நிலப்பரப்பு கொண்டது உக்ரைன். 6 லட்சத்து 3 ஆயிரத்து 628 சதுர கிலோ மீட்டர்கள், 43.6 மில்லியன் மக்கள் தொகை கொண்டது உக்ரைன். ஐரோப்பாவில் மக்கள் தொகை அளவில் 8வது பெரிய நாடாகும் உக்ரைன்.   

தவிர, இது கருங்கடலுடன் ஒரு கடலோரத்தைக் கொண்டுள்ளது, இது துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. 77% மக்கள் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 17% ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பாலும் கிழக்கு மாகாணங்களில் உள்ளனர்.

உக்ரைனில் கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் குறிப்பாக யுரேனியம், நிலக்கரி, இரும்பு, தாது, இயற்கை எரிவாயு, மாங்கனீசு, உப்பு, எண்ணெய் கந்தகம், மரம் மற்றும் பாதரசம் போன்றவை நிறைந்துள்ளன.  

சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, மேற்கத்திய உலகம் மகிழ்ச்சியடைந்தது மற்றும் அமெரிக்கர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்ய முடிந்தது.

சதாம் உசேனின் படைகள் குவைத்தை ஆக்கிரமித்த பிறகு குவைத்தில் அமெரிக்கா தலையிட்டது. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்க நிதி நிறுவனங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய அதிபர் புஷ், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார்.

ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்ற போலிக்காரணத்தின் கீழ் அமெரிக்கர்கள் ஈராக்கில் தலையிட்டனர். அவர்கள் தலைமையை குறிவைத்து, சதாம் ஹுசைனையும், கடாபியையும் கைது செய்து, அவர்களின் ஊடக கையாளுதல்கள் மூலம் அவர்களை மிக மோசமான மனிதர்களாக உலகிற்குக் காட்டினார்கள்.   

ரஷ்யர்கள் உக்ரைனை ஆக்கிரமித்தபோதும், இஸ்ரேல் அதன் அண்டை நாடுகளான சிரியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் வான்வெளிகளை அத்துமீறி, அப்பாவி மக்கள் மீது குண்டுவீசியும், சவூதி அரேபியரும் யேமனில் குண்டுவீச்சைத் தொடர்ந்தனர்.

எது பற்றியும் எந்த கேள்வியையும் ஐ.நா கேள்வி எழுப்ப முடியா கையாலாக அமைப்பாக வீழ்ச்சியடைந்து விட்டது, காரணம் ஐநா அமெரிக்க பெடரல் ரிசர்வ் கையை நம்பியிருப்பதே.  

நேட்டோ என்ற அமைப்பு ஏப்ரல் 4, 1949-ல் 12 நாடுகள் உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் வைக்கப்பட்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக தங்கள் படையை உருவாக்கின.

பனிப்போர் அழுத்தத்தின் விளைவாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க நிர்ப்பந்தித்தது, இதனால் அவர்கள் ஐரோப்பாவில் 'பாதுகாப்பாக' இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு நேட்டோ அவசியமா என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பிறகு, ஈஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து தோன்றிய அனைத்து ‘சுதந்திர’ நாடுகளையும் நேட்டோ ஆக்ரோஷமாகப் பின்தொடர்ந்தது.

சோவியத் கூட்டணியில் இருந்த மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலந்து மற்றும் செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகள் நேட்டோவின் ஒரு பகுதியாக மாற்றியது.

நேட்டோ ரஷ்யாவை தொடர்ந்து சுற்றி வளைத்து வருகிறது, அப்போது அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உண்மையான மற்றும் நியாயமான அக்கறை உள்ளது, அது கவனிக்கப்பட வேண்டும் என்று அதிபர் புதின் தன் பல உரைகளில் குறிப்பிட்டு வருகிறார்,

நேட்டோ படைகள் ஆங்காங்கே ரஷ்ய எல்லைகளில் நிறுத்தப்படுவது, ஏவுகணை தளம் அமைப்பது ரஷ்யாவின் பாதுகாப்புப்பு பங்கம் என்பதை ருஷ்ய மக்களும் உணர்கின்றனர், இது ரஷ்யாவை பொருளாதார ரீதியாக ராஜீய ரீதியாக ராணுவ ரீதியாக சவால் அளிப்பதாகும்.  

உக்ரைனை மேற்கு நாடுகள் பயன்படுத்துவதான குற்றச்சாட்டு....

இந்நிலையில்தான் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும், நேட்டோ விரிவாக்கம் பற்றிய பிரச்சினை ரஷ்யாவிற்கு உண்மையான கவலையாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் நலன்க014-ல் அளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உரிமை உண்டு.

மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியனின் 'இறப்பை' கண்டு மகிழ்ந்தபோது, ​​மிகைல் கோர்பச்சேவை 'மிகப்பெரிய' அறிவுஜீவியாக உருவாக்கி, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவரை அழைத்து, இறுதியில் சோவியத் யூனியனை சிதைத்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்.

நீங்கள் புடினுடன் உடன்படாமல் இருக்கலாம் மற்றும் அவரை இழிவாகப் பார்க்கலாம் ஆனால் அவருடைய தலைமையின் கீழ் ரஷ்யா இப்போது நம்பிக்கையுடனும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் இருப்பதாகவுமே பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகத்தைக் காக்கிறோம் என்று அமெரிக்கா படையெடுப்பு நடத்தி கோடிக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்த, நேட்டோ தலையிட்ட ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, அல்லது சிரியாவில் ஜனநாயகம் மலர்ந்து விட்டதா என்ன? மாறாக அத்ரதையாக அந்த நாடுகளை விட்டு விட்டுச் சென்றதால் இன்னும் மோசமான் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது என்பது கண்கூடு. இதே ‘ஜனநாயகம்’ என்ற பாசாங்கைக் கொண்டுதான் உக்ரைனையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டுள்ளன.

தற்போதைய உக்ரைன் நெருக்கடியின் மூலக்காரணம்:

விக்டர் யனுகோவிக் என்ற முன்னாள் உக்ரைன் அதிபர் வெளிப்படையாக ரஷ்ய ஆதரவாளராக இருந்ததால் 2014-ல் அவர் வெளியேற்றம் தவிர்க்க முடியாமல் போனது. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிராகரித்ததற்காகவும், ரஷ்யாவிடம் இருந்து 15 பில்லியன் டாலர் ஜாமீன் பெறுவதற்காகவும் யூரோமைடன் சதுக்கத்தில் அவரது கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்புகள் வெடித்தன.

உக்ரைனின் இத்தகைய யனுகோவிக் எதிர்ப்புப் போராட்டம் ஜனநாயகத்துக்கான போராட்டம் எனவும், அதே வேளையில் கிழக்கு உக்ரைனில் நடந்த ரஷ்ய ஆதரவுப் போராட்டம் கலகம் என்றும் மேற்கத்திய ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டன.

கிழக்கு உக்ரைன் பகுதி ரஷ்ய ஆதரவு என்பதாலேயே மனித உரிமை மீறல்களைச் சந்தித்தன என்கிறது ரஷ்யா, அதனால்தான் அங்கு பிரிவினைவாதம் தலைதூக்கியது என்பது ரஷ்யவாதம், கிரிமியாவைத் தவிர இரண்டு கிழக்கு மாகாணங்களான Donetsk மற்றும் Luhansk ஆகியவை ரஷ்யாவிற்கு பெரும் ஆதரவைக் கொண்டிருந்தன என்பதில் சந்தேகமில்லை.

'சுதந்திரம்' மற்றும் 'இறையாண்மை' என்ற பெயரில் ரஷ்ய கவலைகளுக்கு மேற்கத்திய உலகில் எந்த பதிலும் இல்லை, ஏனெனில் அவர்கள் உக்ரைனைப் பற்றி மட்டுமே பேசினார்கள், ஆனால் உக்ரைனும் ஒரு பிரச்சனையான நாடாக மாறி வருவதால் ரஷ்ய வம்சாவளியினர் மீதான மனித உரிமைமீறல் பிரச்சினைகளை பேசவில்லை.

கிரிமியாவில் 2014 தலையீட்டிற்குப் பிறகு, நேட்டோ மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கத் தொடங்கின. எந்தவொரு தரநிலையிலும் உக்ரைன் மிகப் பெரிய ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது மற்றும் நேட்டோ அதற்கு அனைத்து பெரிய வெடி ஆயுதங்களையும் வழங்கியது, உக்ரைன் நெருக்கடி அதிகரிக்கக் கூடாது, அதற்கு மேற்கத்திய உலகம் மற்ற நாடுகளுடன் சேர்ந்து அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு பெரிய நாடும் மற்ற நாடுகளின் பிரச்சனைகளிலும் சுரண்டல்களிலும் பங்கு வகித்துள்ளன. ஐரோப்பாவின் காலனித்துவ சக்திகள் உலகத்தை காலனித்துவப்படுத்துவதற்கான காரணங்களை தங்கள் சொந்த சாதனையாகக் கருதுகின்றன.

அதே நேரத்தில் அமெரிக்கர்கள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக்க்கி உலகின் அண்ணாவியாக தன்னை பிரகடனப்படுத்தி வருகிறது. மேற்கண்ட ஏகாதிபத்திய காரணங்களினால் இப்போது போர் மூண்டுள்ளது.

இப்போது, ​​பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வேலை செய்யாது, ஏனெனில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டு ரஷ்ய சார்பு அரசாங்கம் கியேவில் நிறுவப்பட்டால் மட்டுமே ரஷ்யா தன் ஆக்ரோஷத்தை நிறுத்தும், அமெரிக்க தலைமை நேட்டோ நாடுகள் உக்ரைனைத் தூண்டிவிட்டு இப்போது ஒதுங்கிக் கொண்டது.

புதின் செய்தது, ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதில் இருந்து பாதுகாக்க முக்கியமானதாக இருக்கலாம். சுயமரியாதையுள்ள எந்த சக்தி வாய்ந்த நாடும் தனது எல்லையை எதிரிகள் சூழ அனுமதிக்காது என்பதே இப்போதைய சூழ்நிலை,

இப்போதைக்கு தீர்வு பொருளாதாரத் தடை அல்ல, ரஷ்ய நிபந்தனைகளை மதித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு சாத்தியம் நோக்கி நகர்வதுதான் ஒரே தீர்வு. அத்தகைய தீர்வு காண தொலைநோக்குடைய உலகத்தலைவர்களே தேவை இப்போதுள்ள சுயலாப அரசியல், ராணுவ லாபக்கணக்கீட்டுத் தலைவர்களால் முடியுமா என்பது ஐயமே.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US